பிரதமரின் வியட்நாம் விஜயத்தின் மூலம் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளது –  வியட்நாம் குடியரசின் பிரதமர் !

Tuesday, April 18th, 2017

 

வியட்நாமுக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கிவின் மூலம் புதிய அத்தியாயம் ஏற்பட்டுள்ளதாக வியட்நாம் குடியரசின் பிரதமர் குயன் பு தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைக்குப்   பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் அவர் கருத்து தெரிவித்தார்.

இதன் போது வியட்நாம் மீது காட்டிய அக்கறைக்காக அவர் இலங்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள வலுவான அரசாகும் என்று சுட்டிக்காட்டினார். தகவல் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, கனியவளங்கள், ஆடை உற்பத்தி, விவசாயம் உட்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது பற்றி இந்த பேச்சுவார்த்தையின்போது இணக்கம் காணப்பட்டது.

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நீண்டகால இருதரப்பு உறவுகள் நிலவுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தேரவாத பௌத்தம் இலங்கையில் ஏற்படுவதற்கான காரணம் வியட்நாமாகும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

கடந்தகால அனுபவங்களை அடிப்படையாக கொண்டு எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related posts: