பிரதமரின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் இடம்பெற்ற தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு!
 Thursday, November 18th, 2021
        
                    Thursday, November 18th, 2021
            
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாராஹேன்பிட அபயராமயவில் வருடாந்தம் நடைபெறும் கிரி அம்மா தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வு இன்று (18) முற்பகல் நடைபெற்றது.
நாராஹேன்பிட அபயராமாதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரரின் ஆலோசனை மற்றும் அனுசாசனத்திற்கமைய இப்புண்ணிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வருடாந்தம் நடத்தப்படும் இந்த தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வானது இம்முறை 19ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்டது.
சமய வழிபாடுகளில் ஈடுபட்ட பிரதமர் மஹாசங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து தானம் வழங்கும் புண்ணிய நிகழ்வில் ஈடுபட்டார்.
அதன் பின்னர் கௌரவ பிரதமரின் தலைமையில் நூறு கர்ப்பிணி தாய்மார்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
150 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் கொள்வனவு!
பிரதமரின் இந்து சமய விவகாரங்களுக்கான ஆலோசகர்கள் நியமிப்பு!
அதிபர் - ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட கலந்துரையாடல்!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        