பிரச்சினைகளை இனங்காண்பது என்பது ஒருவரை குறைகாண்பதற்கு அல்ல – மாற்றத்தை கொண்டுவருவதற்கான படிமுறையே – பெண்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி பட்டறையில் சுட்டிக்காட்டு!

Monday, February 28th, 2022

கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் என்னும் தொனிப்பொருளில் பெண்களின் ஆற்றலை வலுப்படுத்தும் வகையில் இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளம், யாழ் மாவட்ட பெண்கள் அமைப்பு மற்றும் search for common ground ஆகியன இணைந்து முன்னெடுத்த தலைமைத்துவப் பயிற்சியின் வளங்களை கண்டறிதலும் முன்னுரிமைப்படுத்தலுக்குமான இறுதியளிக்கும் பயிற்சி பட்டறை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் ரில்கோ தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த செயலமர்வு பயிற்சி பட்டறையின் போது  சமூகத்தின் மீதுள்ள பெண்களின் பற்றுதல அரசியலூடாக முன்கொண்டு செல்லும் வகையில் தெரிவுசெய்யப்பட்ட ஒருபகுதி உள்ளூராட்சி மன்றங்களிலிருந்து உள்வாங்கப்பட்டு பெண்களுக்கு குறித்த அமைப்பினரால் கடந்த நான்கு ஆண்டுகளாக பலதரப்பட்ட பயிற்சிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தலைமைத்துவத்திலும் பெண்களது வகிபாகத்தை வலுப்படுத்துவதுடன் அரசியலில் பெண்களை ஈடுபடுத்தும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஆனாலும் இந்த பயிற்சிகளூடாக பெண்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை மக்கள் மயப்படுத்துவதாக அல்லது மக்களிடம் கொண்டுசெல்வதில் பல பிரச்சினைகளும் தடைகளும் இருப்பதாக பெண் உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் கடந்த நான்கு ஆண்டுகளாக குறித்த பயிற்சிப் பட்டறைகள் ஊடாக அதற்கான தீர்வுகளுக்குரிய வழிமுறைகளும் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தில் அல்லது முடிவுகளை எட்டும் வகையில் தூண்டும் அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியலில் இருக்கின்ற பெண்களாகவே இருக்கும் எனவும் கூட்டிக்காட்டியிருந்த துறைசார் தரப்பினர். அவர்களது தேவை மற்றும் அடையாளங்களை இனங்காணுதல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

அத்துடன் பெண்களின் எதிர்காலத்தை சுபீட்சமானதாக மாற்றுவதும் பெண்களது குறித்த பயணம் முற்றுப்புள்ளி இல்லாது செல்லவும் மக்களுடன் இணைந்து பயணித்தலுக்குமானதாகவே இது அமைந்துள்ளது. ஆனாலும் அவற்றை முன்னெடுப்பதில் வளங்கள் இனங்காண்பதிலும் பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகின்றனர்.

ஆனாலும் எடுக்கப்பட்ட முன்மொழிவுகள் மக்களின் நலனை முன்னிறுத்தியதாக இருந்தால் அந்த முன்மொழிவை மக்கள் மட்டுமல்ல ஏனைய வழிகளிலும் நிதிப்பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

பிரச்சினைகளை இனங்காண்பது என்பது ஒருவரை குறைகாண்பதற்கு அல்ல. அது ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கான படிமுறையாகவே இருக்கும். மாறாக அதை ஒரு பிரச்சினையாக அணுக்கக் கூடாது.

அதுமட்டுமல்லாது செயற்பாடுகளை கையில் எடுத்தாலும் அதை செயற்படுபவர்களாக மாறாதிருப்பதே பலவீனமாக இருக்கின்றது.

இதை முன்னெடுப்பதற்கான பொறிமுறையை விரைவாக நகர்த்தினால் பெண்களின் வளர்ச்சிப் போக்கில் அரசியலுக்குள் புதிய பார்வையை பெண்களூடாக புகுத்த முடியும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தமை குறிப்பித்தக்கது..

000

Related posts: