பின்லாந்தின் ஒத்துழைப்புடன் 13 வருட கல்வி வேலைத்திட்டம் முன்னெடுப்பு!

நாட்டின் கல்வி நடவடிக்கையை முன்னேற்ற பின்லாந்து அரசாங்கம் உதவி செய்ய முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய உறுதிசெய்யப்பட்ட 13 வருட கல்வி வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க பின்லாந்து அரசாங்கம் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.
நாட்டில் தொழிற்பயிற்சியை முன்னிலைப்படுத்தி கல்வியை வழங்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பின்லாந்து பிரதிக்கல்வி அமைச்சர் பெற்ர் பெல்டோனஸ் மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.
இதன்போதே இந்த திட்டத்திற்கு உதவ பின்லாந்து அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
Related posts:
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக் கொள்ள 58 நிபந்தனைகள்!
மரண தண்டனை நிறைவேற்றப்படுவது நிச்சயம் – ஜனாதிபதி!
பாடசாலை கல்வியில் செயற்கை நுண்ணறி - கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவிப்பு!
|
|