பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வழங்க அமைச்சரவை அனுமதி!

பின்தங்கிய பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளைப் பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தரத்தின் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்காக ஆயிரத்து 200 ரூபா முதல் ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான காலணிகளைப் பெற்றுக் கொள்ளும் அட்டைகளை இந்த ஆண்டில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 808.27 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
நாடாளுமன்ற அறிக்கைகளை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் மொழிகளில் பெற நடவடிக்கை - சபாநாயகர்!
தகவலறியும் உரிமை ஆணைக்குழுவுக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!
மின்சார நெருக்கடி பிரச்சினையை தீர்ப்பதில் பொது மக்களும் பங்கேற்க வேண்டும் - இலங்கை மின்சார சபையின் ...
|
|