பால் மாவின் விலைகள் உடனடியாக அதிகரிக்கப்படாது- கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு!
Tuesday, January 8th, 2019
சமையல் எரிவாயு மற்றும் பால் மாவின் விலைகளை அதிகரிப்பது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு அதன் விநியோக நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
எனினும் இதுதொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை ஆய்வுகளை நடத்துகிறது.உடனடியாக அவற்றின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படாது.
இது குறித்து நிதி அமைச்சுடனும் கலந்துரையாடல் நடத்தப்பட வேணடும் என்று கைத்தொழில் வர்த்தகத்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
Related posts:
சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வவுனியாவில் திறப்பு!
யாழ் மாவட்டத்தில் ஒரே நாளில் 57 வீதத்திற்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது - வடக...
நயினாதீவு நாகபூசனி அம்மன் கோயில் வருடாந்த மகோற்சவம் இவ்வருடம் இடம்பெறாது!
|
|
|


