பால்மாவின் தரம் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம்!

Saturday, July 27th, 2019

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பாக ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த இடைக்கால அறிக்கையை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வர்த்தக மற்றும் வணிக அலுவல்கள் பதிற்கடமை அமைச்சரான புத்திக பத்திரன ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் தரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில், இதுதொடர்பாக தற்போது விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இப்பிரச்சினைகள் தொடர்பாக நுகர்வோர் அதிகார சபையினால் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை தர நிறுவனம், இலங்கை அணு சக்தி அதிகாரி சபை, சுகாதார அமைச்சின் உணவு ஆய்வகங்கள் மற்றும் தொழிற்துறை தொழில்நுட்ப நிறுவனம் ஆகிய நிறுவனங்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக அனுமதியளிக்கப்பட்ட பின்னரே இறக்குமதி செய்யப்படும் பால்மா சந்தைக்கு விநியோகிக்கப்படுவதாக பால்மா தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன் தரக்குறைவு தொடர்பான குற்றச்சாட்டை இந்நிறுவனங்கள் மறுத்துவருகின்றன.

Related posts: