பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யாது சேவையிலிருந்து நிறுத்த வேண்டும் -தேசிய சிறுவர் பாதுகாப்புச்சபை!

Sunday, June 17th, 2018

பாலியல் குற்றச்செயலில் ஈடுபடும் ஆசிரியர்களை மாற்றம் செய்யாமல் அவர்களை சேவையில் இருந்து இடைநிறுத்த வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உத்தியோகத்தர் கு.கௌதமன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

அண்மையில் பாடசாலைகளில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களால் மாணவிகள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகுவதாக தொடர்ச்சியான முறையில் முறைப்பாடுகள் கிடைத்தவண்ணம் உள்ளன.

அண்மைக்காலங்களில் யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது. இது கலாசார சீரழிவாக இருப்பதுடன் ஆசிரியர் எனும் புனிதமான தொழிலுக்கும் களங்களம் ஏற்பட்டுள்ளது. மாணவர்களை தமது பிள்ளைகள் போல் நடத்த ஆசான்கள் இவ்வாறான கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்க விடயம்.

சில பாடசாலைகளில் சில தனியார் நிறுவனங்களில் ஆசிரியர்கள் மாணவிகளுடன் தவறான நோக்கத்துடன் பழகினால் அது தெரிய வந்தால் அதிபரோ அல்லது குறித்த நிறுவனத் தலைமை ஆசிரியரோ உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம். ஆனால் பல பாடசாலைகளில் இவ்வாறான குற்றச்செயல்களை மூடிமறைக்கிறார்கள். இது ஆபத்தான விடயம் மட்டுமல்லாமல் சிறார்களின் கல்விக்கும் பின்னடைவு ஏற்படுகின்றது.

பெற்றோர்கள் மாணவர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். தமக்கு நடக்கும் அநீதிகளை துன்புறுத்தல்களை மூடிமறைக்காது குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts: