பாலாலி – சென்னை இடையே இதுவரை 229 விமான சேவைகள் – 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள் வருகை – இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் தெரிவிப்பு!

Sunday, December 3rd, 2023

யாழ் சென்னை இடையை 229 விமான சேவைகள் 11ஆயிரத்துக்கு மேற்பட்ட பயணிகள்… இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் யாழ்ப்பாணத்தில் தெரிவித்துள்ளார்.

2023 அக்டோபர் மாதம் முடிவு வரை 229 விமானங்களும் 11,559 பிரியாணிகளுடன் சென்னை யாழ்ப்பாணத்திற்கு பிரியாணங்களை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலா சமவாயத்தின் பொது முகாமையாளர் கிரிஷாந்த பெணான்டோ தெரிவித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம் சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை சமவாயப் பணியகத்தினால் (Sri Lankan Convention Bureau) யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதலாவது MICE Expo ஆனது 2023 நவம்பர் 30 முதல் 2023 டிசம்பர் 03 வரை நடைபெறும் நிகழ்வின் ஊடகவியலாளர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்  – விசேடமாகத் தென்னிந்தியாவிலிருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வட மாகாணத்தை உகந்த MICE சுற்றுலாத் தளமாக விளம்பரப்படுத்துவதை இந்நிகழ்ச்சி நோக்காகக் கொண்டுள்ளது.

கடல் மற்றும் வான்வழிசார் தென்னிந்திய இணைப்புநிலையூடாக இந்திய சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுப்பதற்கு யாழ்ப்பாணம் மிகப் பொருத்தமானதொரு நுழைவாயிலாகக் காணப்படும்.

வணிக மன்றங்கள், B2B நிகழ்வுகள், வலையமைப்புசார் அமர்வுகள், விசேட இராப் போசன விருந்துபசாரம் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பரிச்சயப்படுத்துவதற்கான சுற்றுலா ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு சிறந்த ஊடாடும் தளமாக யாழ்ப்பாண MICE Expo காணப்படும்.

இந்த மூன்று நாள் MICE Expo 2023 நிகழ்ச்சியானது வட மாகாணத்தை வணிக நிகழ்வுகள், சந்திப்புகள், ஊக்குவிப்புகள்,மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளை நடத்துவதற்கு உகந்த தளமாகக் காட்சிப்படுத்தும்.

தெரிவு செய்யப்பட்ட 40க்கும் அதிகமான வாங்குநர்கள் மற்றும் 5 ஊடகவியலாளர்கள் Alliance Air விமான சேவையூடாக தென்னிந்தியாவிலிருந்து 2023ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் திகதி வருகை தரவுள்ளனர்.

வட மாகாண சுற்றுலாத்துறை சேவை வழங்குநர்களை அதிகபட்சமாக வெளிப்படுத்திக்கொள்வதற்கு அக்டோபர் மாதத்தின் போது 28,222 பயணிகள் இந்தியாவில் இருந்து வந்துள்ளார்கள்.

மொத்த வருகையில் 26 வீதத்தில் 16 வீதம் தென்னிந்தியாவில் இருந்து மாத்திரமே பதிவு செய்யப்பட்டுள்ளது. நாங்கள் நம்புகின்றோம் இந்த mice expo நிகழ்வின் ஊடாக இவ்வருகை பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தென்னிந்தியர்களின் வருகையாக இரட்டிப்பாகும்.

நாங்கள் இலங்கை மாநாட்டு பணியத்துடன் இணைந்து செய்யும் திட்டத்திற்கு 160 விண்ணப்பங்கள் கிடைக்க பெற்றுள்ளதையிட்டு பெருமை அடைவதோடு இது இரண்டு தேசங்களுக்கும் இடையிலான உணர்வை மேலும் மேம்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: