பாற்பண்ணையாளர்களின் கடன் தொகையை 10 இலட்சமாக அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை!

Tuesday, February 9th, 2021

பாற்பண்ணையாளர்களுக்காக பாதீட்டில் யோசனை முன்வைக்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய் கடன் தொகையை 10 இலட்சமாக அதிகரிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற முன்னேற்ற ஆய்வு கூட்டத்தின் போதே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

பாதீட்டின் யோசனைகளுக்கு அமைய செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் மக்களின் நிவாரணம் தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அரசாங்க பணியாளர்களுக்காக வழங்கப்படும் வீட்டு கடனுக்கான வட்டி விகதிம் 7 சதவீதமாக அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சலுகைக்கு அமைய அரசாங்க பணியாளர்களின் வேதனம் 2,500 முதல் 3,000 ரூபாவிற்கு இடையில் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நெல் கொள்வனவிற்கு தேவையான கடன் வழங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு இந்த கூட்டத்தின் போது பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

அத்துடன் இறைவரி திணைக்களத்திற்கு இணையத்தளம் முறைமை ஊடாக வரி செலுத்தும் நடவடிக்கை ஏற்கனவே அமுலாகியுள்ள நிலையில் அதற்காக 5 வங்கிகள் இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: