பாரிய தீ விபத்து – தலவாக்கலையில் 24 வீடுகள் முற்றாக சேதம்!

தலவாக்கலை – ஹொலிரூட் தோட்டத்தின் கிழக்குப் பிரிவிலுள்ள தொடர் குடியிருப்பில் நேற்றிரவு(29) ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
இதனால், குறித்த குடியிருப்புகளில் வசித்துவந்த சுமார் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் ஹொலிரூட் தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
Related posts:
புலிக்கொடியை ஏந்துவதற்கு மறுப்பு தெரிவித்த வடக்கின் முதல்வர்!
தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்பவர்களுக்கான தடுப்பூசிக்கு எவ்வித கட்டணங்களும் அறவிடப்பட மாட்டாத...
தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு "நேர்மைக்கு மகுடம்" விருது!
|
|