பாதுகாப்பான நாடுளில் ஒன்று இலங்கை என்கிறார் தென் கொரிய தூதுவர்!

Saturday, October 24th, 2020

இலங்கை உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் ஒன்று என்று வர்ணித்துள்ள இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங், தென் கொரிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும் ஆலோசனை விடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்நத ராஜபக்ஷ அவர்களை நேற்று (23.10.2020) அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்பேர்து மேலும் கருத்து தெரிவித்த அவர், சில தசாப்பதங்களுக்கு முன்னர் இலங்கையின் பிரதான முதலீட்டாளராக தென் கொரிய விளங்கியிருந்தமையை நினைவுபடுத்தியதுடன், தற்போது இருநாடுகளுக்கும் இடையில் சுமார் 327 மில்லியன் வர்த்தக பரிமாற்றம் இருப்பதாகவும் சுட்டிக் காட்டினார்.

குறித்த வர்த்தகப் பரிமாற்றத்தை அதிகரிக்கும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றுமதி – இறக்குமதியை அதிகரித்தல், சுற்றுலா மற்றும் இலங்கையர்களுக்கு தென் கொரியாவில் வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.

Related posts:

மதுபானம் மற்றும் சிகரட் பாவிப்போருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படாது - சிகரட் மற்றும் மதுசாரம் தொடர...
குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும் முன்வாருங்கள் - செல்வந்த ந...
இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - மரணங்களின் அதிகரிப்பு வேகமானது 1.07 சதவீதமாக பத...