பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிர்வரும் 14 திகதி நஷ்டஈடு!
 Sunday, June 12th, 2016
        
                    Sunday, June 12th, 2016
            
சாலாவ பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நஷ்டஈட்டுத்தொகையை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) வழங்கத் தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாவட்டச் செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.
சேதமடைந்த வீடுகள் தொடர்பான மதிப்பீடு நாளைய தினம் நிறைவுக்கு வரவுள்ள நிலையில் குறித்த மதிப்பீடுகளின் அடிப்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் தற்போதுள்ள மதிப்பீட்டின்படி முழுமையாக சேதமடைந்த வீடுகள் மற்றும் கட்டிடங்கள் எண்ணிக்கை 654 ஆக காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை மதீப்பீடுகள் நிறைவடைந்ததன் பிறகு சீதாவாக்கை பிரதேச சபைக்குட்பட்ட வீட்டு உரிமையாளர்களுடன் கலந்துரையாடி சேதமடைந்த வீடுகளுக்கு ரூபா 50,000 வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் தெரிவித்தார்
Related posts:
ஏழு மாதங்களில் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகம்  - குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவிப்பு!
இலங்கையின் வளர்ச்சிக்கான நீண்டகால தீர்வுகளில் குறைபாடுகள்  உள்ளன - கானா நாட்டின் முக்கிய செய்தித்மான...
நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப...
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        