பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Sunday, April 29th, 2018
யாழ் நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாதைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றி மக்களின் சிரமங்களை நீக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ் மாவட்ட போக்குவரத்துப் பொலிஸார் யாழ் வணிகர் கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நடவடிக்கைகளிலிருந்து தவறும் வர்த்தகர்களின் பொருள்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கூடிய கவனம் எடுத்து தங்கள் விற்பனை பொருள்களையும் விளம்பரப் பலகைகளையும் அகற்றி ஒத்துழைப்பு வழங்கும்படி யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Related posts:
யாழ் போதனா வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
கொரோனா மூன்றாம் அலையில் கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் சுமார் 10 ஆயிரம் பேருக்கு தொற்று!
12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு ஆயிரத்து 5 ரூபாவால் இன்று நள்ளிரவுமுதல் விலைக்குறைப்பு - ல...
|
|
|


