பாடசாலை விடுமுறை காலத்தில் திருத்தம் – புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவிப்பு!
Tuesday, April 11th, 2023
2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருகின்றனர்.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும். இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் அபகரிப்பு!
தமிழ்மக்களின் அரசியல் அதிகாரத்தை முடக்கி ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கின்றது கூட்டமைப்பு
தாயக மண்ணின் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக ஈ.பி.டி.பி மிளிர்கிறது - கட்சியின் சர்வதேச அமைப்பாளர் ...
|
|
|


