பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதை பொருள்! பெற்றோரே எச்சரிக்கை!

Friday, November 25th, 2016
நாட்டில் பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து போதையேற்றும் ஒருவகை ரொபி விற்பனை செய்யப்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள கடைகள் சிலவற்றில் இந்த போதை டொபி விற்பனை செய்யப்படுவதாக உணவக உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.சீனாவில் கொள்வனவு செய்யப்படுவதாக கூறப்படும் அந்த டொபி வகையின் வாசனையை மூக்கில் உணர்வதற்காக வாயின் கீழ் வைத்துக்கொள்வதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் அதன் ஊடாக போதையேறும் வகை ஒன்றே காணப்படுகின்றதென உறுதியாகியுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
150 ரூபாய் விலைக்கு விற்பனை செய்யப்படும் அந்த டொபி வகை நாடு முழுவதும் உள்ள பல கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.லெமன், ஸ்டோபரி போன்ற பல்லேறு சுவையில் தயாரிக்கப்படும் அந்த டொபி வகை கொழும்பு பீப்பல்ஸ் பார்க் பிரதேசத்தில் விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.இதனையடுத்து பாடசாலை மாணவிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த டொபி வகையை நாட்டுக்கு இறக்குமதி மற்றும் விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் அதிகாரிகளிடமும் அறிவிக்க சங்கம் தீர்மானித்துள்ளது.

DSC_0493

Related posts: