24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையை நாடுங்கள் – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு எலியுறுத்து!

Sunday, January 2nd, 2022

டெங்கு நோய் காரணமாகக் கடந்த ஆண்டு 27 பேர் உயிரிழந்தனர். எவ்வாறாயினும் 2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய 2019 ஆம் ஆண்டு நாட்டில் 31 ஆயிரத்து 162 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

எவ்வாறாயினும் கடந்த ஆண்டு 19 ஆயிரத்து 87 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடையாளம் காணப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 2019 ஆண்டுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு குறைவடைந்துள்ளதாகத் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 24 மணித்தியாலங்கள் தொடர்ச்சியான காய்ச்சல் காணப்படுமாயின் வைத்திய ஆலோசனையைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: