பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – 36 பேர் காயம்!

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தம பகுதியில் இருந்து மொனராகலை நோக்கி இன்று (29) காலை பாடசாலை மாணவர்களுடன் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றே விபத்திற்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயிற்சி பெறுநர் இன்மையால் பயிற்சியை இடைநிறுத்தும் நிலை - பனை அபிவிருத்தி சபை கவலை!
மின்சாரம் தடைப்படும்
பெருந்தொகையான நெல் மூடைகள் காணாமல் போன சம்பவம் - இரண்டு அதிகாரிகள் பணியிலிருந்து இடை நிறுத்தம்!
|
|