வரும் 24 ஆம் திகதிமுதல் 27 ஆம் திகதிவரை நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்கு வரும் – ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!

Monday, April 20th, 2020

தற்பொழுது காலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள 21 மாவட்டங்களிலும் திர்வரும் 25 மற்றும் 26ஆம் திகதிகளில் ஊரடங்குச் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அதுவரையான காலப்பகுதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது போன்று இரவு 8 மணி           தொடக்கம் அதிகாலை 5 மணிவரை ஊரடங்குச் சட்டம் குறித்த மாவட்டங்களில் நடைமுறையில் இருக்கும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள கொழும்பு, களுத்துறை, கம்பஹா மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்து 27ஆம் திகதி அதிகாலை 5 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அத்துடன் மாவட்டங்களிடையே உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேலையில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் முன்னர் குறிப்பிட்ட நிபந்தனைகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts: