பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை – இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டாலும் பாடசாலை மாணவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட தொழிற்சங்க உறுப்பினர்கள், எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள போதிலும் பிள்ளைகள் பாடசாலைகளுக்கு செல்வதை உறுதிப்படுத்துவதாக உறுதியளித்துள்ளனர். எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களாக குறைந்த எண்ணிக்கையிலான தனியார் பேருந்துகள் மாத்திரமே இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ரெஜினோல்ட் குரேயிற்கு புதிய பதவி!
ஜனாதிபதி தேர்தல்: எதிர்ப்புகளை நிராகரித்த மஹிந்த தேசப்பிரிய!
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு துரித பிசிஆர் சோதனை - சுகாதார அமைச்சுக்கு ஜனாதிபதி அறிவுறுத்து!
|
|