பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் நாளைமுதல் ஆரம்பம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!
Sunday, March 24th, 2024
பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதனடிப்படையில் நாட்டில் உள்ள 1,7 இலட்சம் பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.
000
Related posts:
அமைச்சுக்களை வசப்படுத்திய வடக்கின் முதல்வர்!
ரணில் விக்ரமசிங்கவின் பெயர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பு!
மிரிஹானை சம்பவம் - 15 பேருக்கு இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்நிலை!
|
|
|


