பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக கஞ்சி – அமைச்சரவைக்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிவு!
Monday, October 18th, 2021
பாடசாலை மாணவர்களுக்கு தற்போது வழங்கப்படும் ஒரு கிளாஸ் பாலுக்கு பதிலாக உள்ளூர் அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒரு கிளாஸ் கஞ்சியை வழங்க கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அமைச்சரவைக்கு முன்மொழிந்துள்ளார்.
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 923 பாடசாலைகளில் தரம் 01 முதல் ஐந்தாம் தரம் வரை உள்ள மாணவர்களுக்கு ஒரு கிளாஸ் பால் வழங்கும் திட்டம் கடந்த 2012 ஆம் ஆண்டுமுதல் செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு வழங்கப்படும் பாலுக்கு பதிலாக கஞ்சியை மாற்ற அமைச்சர் முன்மொழிந்துள்ளார். அத்துடன் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு நாளைக்கு ரூ .23 ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
அரச வாகனங்களை பயன்படுத்த தடை - தேர்தல்கள் ஆணைக்குழு!
அரச சொத்துக்களோ அல்லது வாகனங்களோ தேர்தல் விடயங்களுக்கப் பயன்படுத்தக்கூடாது - ஜனாதிபதி !
சீராக எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுங்கள் - அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு!
|
|
|


