பாடசாலை மாணவர்களுக்கு பாலுக்கு மாற்றீடாக அரிசிக் கஞ்சி – விவசாய அமைச்சு தகவல்!

பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தீர்வாக பாடசாலை மாணவர்களுக்கு ஒரு கோப்பை பாலுக்கு பதிலாக அரிசி கஞ்சி ஒரு கோப்பை வழங்குவதற்கு விவசாய அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
அத்துடன் நாட்டில் பால் உற்பத்தி போதுமானதல்ல என்ற நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சரின் தலைமையில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்துடன் இடம்பெற்ற கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு இடையில் ஊட்டச்சத்து குறைபாடு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தொற்றுநோய்கள் அல்லாத நோய்கள் அதிகரித்து வருவதாக அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கு தீரவாக நச்சுத்தன்மையற்ற பாரம்பரிய உள்ளூர் அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு கோப்பை கஞ்சியை வழங்குவது மிகவும் முக்கியமானதென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது..
Related posts:
|
|