பாடசாலை சீருடைக்காக 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபா செலவு – கல்வி அமைச்சு!
Wednesday, January 8th, 2020
இந்த ஆண்டில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும், பிரிவெனா மாணவர்களுக்கும் சீருடைகளை வழங்குவதற்கான வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய இன்றுமுதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளில் உள்ள மாணவர்களும் வவுச்சர்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் பாடசாலை சீருடைக்காக அரசாங்கம் 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.
11 கட்டங்களாக சீருடைகளுக்கான வவுச்சர்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதேநேரம் கஷ்ட, அதிக கஷ்ட மற்றும் 100 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாதணிகளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய 7 லட்சம் பாதணிகளுக்கான வவுச்சர்களுக்காக 958 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
|
|
|


