பாடசாலைக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை!

அடுத்த ஆண்டு பாடசாலைகளில் தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கைக்கு அமைவாக நேர்முகப் பரீட்சைக்கான குழு நியமிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதுடன் இதுதொடர்பான ஆலோசனைகள் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்பொழுது கிடைக்கப் பெற்றுள்ள விண்ணப்ப படிவங்களை பட்டியலிடும் நடவடிக்கைகள் பாடசாலை மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
செப்டெம்பர் 15 ஆம் திகதியளவில் முதற்கட்ட நேர்முக பரீட்சை பூர்த்தி அடையும் எனவும், இந்த பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் தொடர்பான தற்காலிக பெயர் பட்டியல் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி அளவில் பாடசாலைகளில் காட்சிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ் விரைவில்!
மஹிந்த மாமாவிடம் நீதி கோரி யாழ். பொம்மைவெளியில் போராட்டம்!
சுகாதார விதிமுறைகளை பின்பற்றாத பேருந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் இரத்து - தேசிய போக்குவரத்து ஆண...
|
|