பாடசாலைக்கு அருகில் வெடிகுண்டுகள் மீட்பு – பொலிஸார் தகவல்!

களுத்துறையிலுள்ள பாடசாலைக்கு அருகில் கைக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுரலிய, பாலிந்தநுவர ஆரம்ப பாடசாலை கட்டடத்திற்கு அருகில் இருந்து கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 13 கைக்குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பாடசாலை கட்டடத்திற்கு அருகில் இருந்த பொதி தொடர்பில் காவலாளி சோதனையிட்ட போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காவலாளி இது தொடர்பில் உடனடியாக பாடசாலை அதிபரிடம் அறிவித்துள்ளார்.
அதிபர், பதுரலிய பொலிஸாருக்கு தகவல் வழங்கியதனை தொடர்ந்து இராணுவத்தினர் அங்கு குண்டுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அத்துடன் பதுரலிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
கழிவுகளைத் தரம் பிரித்துப் போடுங்கள் - சுகாதாரப் பணிப்பாளர் மக்களுக்கு அறிவுறுத்தல்!
நியூ டயமன்ட் கப்பல் தீப்பரவல் சம்பவம் - இரண்டு வருடங்களின் பின்னர் வழக்கு தொடர கடல்சார் சூழல் பாதுகா...
சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் - அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் ...
|
|