பாடசாலைகள் இன்றுமுதல் ஆரம்பம் – மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்படும் என எசசரிக்கை!
Monday, August 10th, 2020
பாடசாலைகள் இன்றுமுதல் வழமை போன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாட்டில் கொரோனா தொற்றும் ஆபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், உட்பட பலர் மீண்டும் ஒரே நேரத்தில் சமூகத்திற்கு செல்வதனால் இந்த ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன் பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார முறையை தொடர்ந்து அதே முறையில் பின்பற்றுமாறு அவர் அறிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரையில் 2844 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 2579 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது 252 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலஞ்சம் பெற்ற உதவி அதிபர் கைது!
தாதியர்களது அர்ப்பணிப்பு வீண்போகாது இருக்க அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை இறுக்கமாக பின்பற்றுவது அவச...
குறைந்தளவு வருமானங்கள் பெறும் குடும்பங்களுக்கு விசேட இலத்திரனியல் அட்டை – அமைச்சரவை அங்கீகாரம்!
|
|
|


