இலஞ்சம் பெற்ற உதவி அதிபர் கைது!

Thursday, September 15th, 2016

ஆரம்ப கல்வி பாடசாலை ஒன்றின் உதவி அதிபர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் ஒன்றிற்கு மாணவர் ஒருவரை அனுமதிப்பதற்காக ரூபா 15 ஆயிரம் இலஞ்சமாக பெற்ற குற்றத்திற்காகவே இவரை கைது செய்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிபுலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் எஸ.எஸ்.பி.பிரியந்த சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த அதிபர் ரூபா 35 ஆயிரம் இலஞ்சமாக கோரியுள்ளார் என்றும் ரூபா 20 ஆயிரம் இலஞ்சமாக பெற்றுள்ளார் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதாகவும், கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கூறியுள்ளது.

arrest_07

Related posts: