பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளை தீர்மானம் – கல்வி அமைச்சு தெரிவிப்பு!
Thursday, July 16th, 2020
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான செயலணியுடன் கலந்துரையாடித் தீர்மானம் எடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேவேளை, பாடசாலைகள் மீளத் திறக்கப்படாவிடில் வீடுகளில் இருந்து மாணவர்களுக்குப் பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களுக்கு புதிய ஆலோசனை அறிக்கை ஒன்றை விநியோகிப்பதற்குத் திட்டமிடப் பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாடசாலைகளை மீளத்திறப்பதில் தாமதம் ஏற்பட்டால் உயர்தர மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான திகதிகளும் தாமதமாகுமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காணாமல் போனோர் அலுவலகம் : ஐ.நா. பாராட்டு!
திருடர்களுக்கு தண்டனை நிச்சயம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!
மாகாண சபைத் தேர்தலை நடத்த நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும்!
|
|
|


