பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சிலவற்றில் மாற்றம் செய்ய நேரிடலாம் – என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவிப்பு!

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும்போது, தற்போது வெளியிடப்பட்டுள்ள சில சுகாதார வழிகாட்டல்களில் மாற்றம் மேற்கொள்ளப்பட வேண்டி ஏற்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ள அவர் மேலும் கூறுகையில் –
பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், அந்த செயற்பாடுகள் உரியவாறு முன்னெடுக்கப்படுகின்றதா? என்பது குறித்து பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், முன்கூட்டிய நடவடிக்கை மேற்கொண்டால் அது தவறில்லை என தாம் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மாணவர்கள் செயற்பட வேண்டிய முறைமை குறித்து தெளிவுபடுத்த வேண்டும். இதற்கமைய, சுகாதார அமைச்சினால், கல்வி அமைச்சுக்கு விசேட வழிகாட்டல் கோவை வழங்கப்பட்டுள்ளதாகவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|