பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுப்பவேண்டாம் – கல்வி அமைச்சு அதிரடி உத்தரவு!
Monday, May 21st, 2018
தற்போது தென் மாகாணத்தில் பரவிவரும் வைரஸ் நோய் காரணமாக மாகாண கல்வி அமைச்சு பெற்றோர்களுக்கு சிறப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்பிரகாரம் மாணவர்களுக்கு காய்ச்சல் மற்றும் தடிமல் காணப்படுமாயின் , அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என மாகாண கல்வி அமைச்சு பெற்றோருக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, பரவிவரும் நோய் தொடர்பில் நாளைய தினம தொற்று நோய் பிரிவு குழுவொன்று குறித்த பகுதிகளில் தளஆய்வினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போது நாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்து வருவதால் காய்ச்சல் மற்றும் தொற்று நோய் பரவக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
Related posts:
யாழ்.குடாநாட்டின் சில இடங்களில் நாளை மின்தடை!
இயற்கை அனர்த்த நிலைமைக்கு முகங்கொடுப்பதற்கு தயார் - இடர்முகாமைத்துவ மத்திய நிலையம்!
அமைதியை சீர்குலைத்து வன்முறையை தூண்டும் பதிவுகளை பதிவிட்டால் சட்ட நடவடிக்கை!
|
|
|


