பாடசாலைகளில் தொடர்ச்சியாக நீர் விரயமாவதைக் கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை – சுற்றறிக்கையை வெளியிட கல்வி அமைச்சு ஏற்பாடு!

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 1988 ஆம் ஆண்டுமுதல் பாடசாலைகளுக்கு இலவச நீரை வழங்கி வருகின்றது
பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் அமைப்பிலிருந்து நீச்சல் குளங்கள், குடியிருப்புகள் மற்றும் பாடசாலை நிர்மாணப் பணிகள் போன்றவற்றிற்கு நீரை விநியோகிப்பதை இடைநிறுத்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலைகளில் தொடர்ச்சியாக நீர் விரயமாவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கல்வி அமைச்சு, நீர்வள வடிகாலமைப்புச் சபை மற்றும் திறைசேரி என்பன ஒன்றிணைந்து கலந்துரையாடி இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.
அதன்படி தேசிய நீர்வள மற்றும் வடிகாலமைப்புச் சபை, பாடசாலையில் பயிலும் ஒரு மாணவருக்கு தினமும் 20 லீற்றர் நீரை மாத்திரம் வழங்க தீர்மானித்துள்ளதுடன், அதற்கான செலவை திறைசேரியே ஏற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை 1988 ஆம் ஆண்டுமுதல் பாடசாலைகளுக்கு இலவச நீரை வழங்கி வருகின்றது.
பாடசாலைகளில் காணப்படும் நீச்சல் குளங்களுக்கு கட்டுமானப் பணிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு நீர் வழங்கப்படுவதால், பாடசாலைகளுக்கு வழங்கப்படும் இலவச நீரை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த நீரை விட பாடசாலையில் அதிகளவு நீர் பயன்படுத்தப்படுமாயின் அதனை பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு செலுத்துமாறு பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார்.
நீர் வளத்தை வீணாக்காமல் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|