பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் – இலங்கை கடற்படைத் தளபதி சந்திப்பு – இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

Friday, February 11th, 2022

இலங்கைக்கான புதிய பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்து கலந்துரையாடிள்ளார்.

பெப்ரவரி 2 ஆம் திகதி அன்று இலங்கைக்கான பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகராக மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி நியமிக்கப்பட்டதன் பின்னர் கடற்படைத் தளபதியுடனான மேற்கொண்ட முதல் உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

இதன்போது கடற்படைத் தளபதி பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருக்கு புதிய நியமனத்தின் பொறுப்பான கடமைகளை வெற்றிகரமாகச் செய்ததற்காக தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இத்துடன் குறித்த கலந்துரையாடலில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் மற்றும் கடற்படைத் தளபதியின் பாகிஸ்தானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பான சில விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.

மேலும், குறித்த சந்திப்பை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வில் இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் சப்தர் கானும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: