ஹாலோவீன் நெரிசலில் சிக்கி 151 பேர் பரிதாபமாக உயிரிழப்பு – தென்கொரியாவில் துக்க தினம் பிரகடனம் !

Sunday, October 30th, 2022

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 151 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 82 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 19 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹாலோவீன் கொண்டாட்டத்துக்காக நகரின் பிரபலமான இரவு வாழ்க்கைப் பகுதியான Itaewon இல் பெரும் கூட்டம் கூடியதால் மக்கள் நெரிசல் ஏற்பட்டது.

நேற்றிரவு 10 மணியளவில் (1300 GMT) ஏற்பட்ட இந்த நெரிசலில் இரண்டு வெளிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 149 பேர் கொல்லப்பட்டதாக தீயணைப்புத் பிரிவு AFP யிடம் தெரிவித்துள்ளது.

இந்த நெரிசலால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் 20 வயதுக்குட்பட்ட பதின் வயதினர் என்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு இடம்பெற்ற முதல் முகக்கவசம் இல்லாத ஹாலோவீன் நிகழ்வு இதுவாகும்.

சம்பவம் தொடர்பான காணொளிகளில், தெருக்களில் உடலம் வைக்கும் பைகள், செயற்கை சுவாசம் செய்யும் அவசரகால பணியாளர்கள் மற்றும் மீட்பு பணியில் ஈடுபடுபவர்கள் மற்றவர்களின் அடியில் சிக்கியவர்களை இழுக்க முயற்சிக்கும் காட்சிகளை காணமுடிகிறது.

இதேவேளை, ஹாலோவீன் பண்டிகையின் போது ஏற்பட்ட பேரழிவுக்கு தமது சோகத்தை தெரிவித்துள்ள தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக்-யோல் தேசிய துக்கக் காலத்தை பிரகடனம் செய்துள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

000

Related posts: