பழமையான பொருளாதாரப் போக்கும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிப்பு!

Monday, May 27th, 2024

நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பழமையான பொருளாதாரப் போக்கையும் அரசியல் போக்கையும் மாற்றியமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட இளைஞர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்

பழமையான பொருளாதார முறைமையினால் தான் நாட்டில் வேலையின்மை பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எனவே புதிய பொருளாதார முறைமையை உருவாக்குவதன் ஊடாக புதிய தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட இளைஞர்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை நேரடியாக ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கும் சந்தர்ப்பமும் இதன்போது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: