பளை இலங்கை வங்கி கிளைக்கு சென்றவர்களிடம் விசேட கோரிக்கை!
Saturday, July 24th, 2021
பளை நகரில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பணியாற்றும் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே , குறித்த வங்கிக்கு சென்றுவந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்துமாறு சுகாதார பிரிவு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர் யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பீ.சி.ஆர் பரிசோதனையில் 6 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அத்துடன் மேலும் ஒருவருக்கு 2 ஆம் தடவை பீ.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 12ம் திகதி தொடக்கம் 20ம் திகதிவரை வங்கியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை அடையாளப்படுத்தி உதவுமாறு சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மூடியுள்ள வீடுகளையும் சோதனையிட இராணுவத்துக்கு அதிகாரம் கொடுக்க வேண்டும் - காதினல் மெல்கம் ரஞ்ஜித் ஆண...
ஜனாதிபதி ஊடக விருது வழங்கல் விழாவை நடத்த அமைச்சரவை அனுமதி!
காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் - அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!
|
|
|


