பளையில் பேருந்துடன் ஹயஸ் மோதி கோரவிபத்து: ஐவர் பலி!
Thursday, September 15th, 2016
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஹயஸ் வாகனத்தில் வந்த 5 பேர் ஸ்தலத்தில் பலியானதுடன் மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்..
குறித்த கோர விபத்து இன்று(15) காலை 6 மணியளவில் பளை தர்மங்கேணி பகுதியில் நடந்துள்ளது.
இச்சம்பவத்தில் ஸ்தலத்திலேயே 5 பேர் துடிதுடித்து பலியாகியுள்ளனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலைககு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மத்துகம நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று எதிர் திசையில் பயணித்த ஹயஸ்வான் ஒன்றுடன் மோதி அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது ஹயஸ் வானில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உள்ளிட்ட ஐவர் உயிரிழந்துள்ளனர்.




Related posts:
பூட்டான் அரசகுடும்பத்தினர் இலங்கைக்கு விஜயம்!
கொரோனா ஒழிப்பிலிருந்து வெளியேறும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்!
நாட்டை கட்டியெழுப்ப ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை!
|
|
|


