பல்கலை அனுமதி வெட்டுப்புள்ளி – இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தகவல்!

Thursday, August 1st, 2024

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை விரைவாக தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஓகஸ்ட் மாத இறுதிக்குள் வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்படுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல்கலைக்கழக அனுமதிக்காக 87,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. எனினும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் போதிய பணியாளர் இல்லாததால் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதில் சில தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக பல பல்கலைக்கழகங்கள் அதற்கான அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த மாத இறுதிக்குள் வெட்டுப்புள்ளிகளை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 43,000 க்கும் அதிகமாகுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: