பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராக பேராசிரியர் வசந்தி அரசரட்ணம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பதவி வகித்த பேராசிரியர் வசந்தி அரசரட்ணம், தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயிரியல் இராசயனத் துறையின் முதுநிலை விரிவுரையாளராக உள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கடந்த பதவிக்காலத்தில் தமிழ் உறுப்பினராக பேராசிரியர் குமாரவடிவேல் பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரையாண்டு காலத்தில் 1000 முறைப்பாடுகள் !
டெங்கு நோய் வைரஸ் வீரியமிக்கதாக காணப்படுகின்றது
யாழ்ப்பாணத்தில் இயங்கிவரும் தனியார் நிறுவனங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை - இடம்பெற்ற சிறுவர் அபிவிர...
|
|