பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்ப காலம் நீடிப்பு – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்!

2019/2020 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி இன்னும் இரண்டு வாரங்களுக்கு குறித்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டின் அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக மேலும் தெரிவித்தார்.
2019/2020 கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழக நுழைவிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை மார்ச் மாதம் 26ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வருடாந்தம் 25 ஆயிரம் இலங்கையர்கள் புகைத்தலால் உயிரிழப்பு!
பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதே கொரோனா தொற்றிலிருந்து விடுபட ஒரே வழி - சுகாதார அதிகாரிகள் சுட்...
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குங்கள் - சர்வதேச சமூகத்தின் ஆதரவைக் ...
|
|