பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை பத்திரம்!
Tuesday, October 2nd, 2018
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று(02) முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் கொள்கை திட்டமிட்டல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இந்த யோசனையை முன்வைக்கவுள்ளன.
இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும், அந்த நாட்டின் விமான சேவைகள் அதிகார சபைக்கும் இடையில், பலாலி விமானநிலைய சாத்தியப்பாட்டு அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்நிலையிலேயே இன்று பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கான அமைச்சரவை யோசனை முன்வைக்கப்படுகிறது என தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
நாட்டில் இருதய சிகிச்சைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
கற்றல் நடவடிக்கையின் போது மாணவர்கள் முகக்கவசங்களை அணிவது அவசியமில்லை - பிரதி சுகாதார சேவைகள் பணிப்பா...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்டது புதிய விதிமுறை - விளையாட்டுத்துறை அமைச்சு - துறைச...
|
|
|


