ரின் மீன் இறக்குமதியை உடன் தடை செய்ய வேண்டும் – கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு!

Saturday, October 28th, 2017

தற்போது மீன் உற்பத்தி பெருமளவில் அதிகரித்துள்ளதால் ரின் மீன் உட்பட அனைத்து மீன் வகைகளின் இறக்குமதிகளையும் தற்காலிகமாக தடை செய்யும் படி கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் அமைச்சு நிதி அமைச்சைக் கோரியுள்ளது.

இது பற்றி கடற்றொழில் அமைச்சு தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களில் அண்மைக் காலங்களில் நிலவும் பருவநிலை காரணமாக நாட்டின் தென்பகுதி கடலோரப் பிரதேசங்கள் உட்பட ஏனைய அனைத்து கடலோரப் பிரதேரசங்களிலும் மீன் உற்பத்தி பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளிலிருந்து ரின் மீன் மற்றும் மீன் வகைகளை இறக்குமதி செய்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் படி நிதி அமைச்சைக் கோரியுள்ளோம்.

எவ்வாறாயினும் தென்பகுதி மற்றும் ஏனைய கடலோரப் பிரதேசங்களில் கொப்பறா மற்றும் தலபத் வகை மீன்களை விட ஏனைய வகை மீன்களே கூடுதலாகப் பிடிக்கப்படுவதால் கொப்பறா மற்றும் தலபத் மீன் ரின் வகைகளைத் தவிர ஏனைய மீன் ரின் இறக்குமதியையும் மீன் வகைகளின் இறக்குமதியையும் உடனே தடை செய்ய முடியும்.

குறிப்பிட்ட இரண்டு மீன் வகைகளையும் விட ஏனைய மீன் வகைகள் தாராளமாகவே கிடைப்பதால் அவற்றின் விலை பெருமளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் இந்த வகையில் அவற்றின் இறக்குமதி செலவினம் ஒப்பீட்டளவில் மிகவும் அதிகமாக இருப்பதால் அவற்றைத் தடை செய்வதன் மூலம் இறக்குமதி செலவினங்களையும் வெளிநாட்டு செலாவணியையும் பெருமளவில் மீதப்படுத்த முடியும் எனவும் கடற்றொழில் அமைச்சு நிதி அமைச்சுக்கு சுட்டிக்காட்டியுள்ளது

Related posts: