பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பு – பயணிகள் முனையத்தையும் விரிவுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
Tuesday, June 20th, 2023பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதையை விஸ்தரிப்பதற்கும் பயணிகள் முனையத்தை விரிவுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது காணப்படும் 900 மீட்டர் ஓடுபாதையை புனரமைத்து, புதிதாக 300 மீட்டர் ஓடுபாதையை இணைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இதற்காக 168 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
தற்போதுள்ள சிறிய பயணிகள் முனையத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையால் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கம் என துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
Related posts:
சிறைச்சாலை பேருந்து மீதான துப்பாக்கி பிரயோகம்: எவரும் கைது செய்யப்படவில்லை!
சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதியால் பிரகடனம் – மக்களின் தேவைகளை ஈடு செய்வதற்கான உணவும் கைய...
உத்தியோகபூர்வமாக பதவி விலகினார் கோட்டாபய ராஜபக்ச – புதிய பிரதமரை தெரிவுசெய்ய நாளையதினம் நாடாளுமன்றம்...
|
|
|


