பலத்த காற்று – இடியுடன் கூடிய மழை – வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
Tuesday, December 6th, 2022
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வடஅந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலைவிருத்தி அடைந்துள்ளது.
அது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம்காரணமாக டிசம்பர் 07 ஆம், 08 ஆம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் அவ்வப்போது அதிகரித்து வீசக் கூடிய பலமான காற்றுடன் மிகவும் கொந்தளிப்பான கடற்பரப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வழங்கப்படும் எதிர்கால ஆலோசனைகள் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதிபதி இளஞ்செழியனிடம் மன்றாடிய மரண தண்டனைக் கைதி!
முன்பள்ளி சிறார்களுடன் அவர்களை வழிநடத்தும் ஆசிரியர்களது எதிர்காலமும் சிறப்பானதாக அமைய நடவடிக்கை மேற்...
சாரதி அனுமதிப்பத்திரம் பெறவந்தவர்களில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டமை கண்டறிவு - சிரேஷ்...
|
|
|


