பரேட் சட்ட விவகாரம் – இலங்கை வங்கிகள் சங்கம் எச்சரிக்கை!
Wednesday, March 13th, 2024
பரேட் சட்டத்தின் ஊடாக கடனை வசூலிப்பதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எடுத்துள்ள தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை வங்கிகள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
முழு வர்த்தக சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு சில கடனை செலுத்தாதவர்களின் அழுத்தங்களுக்கு அமைய இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக இலங்கை வங்கிகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை கடன் வசூல் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கத்தின் தலையீடு ஒரு எச்சரிக்கையாகும் என்றும் இலங்கை மத்திய வங்கியும் குறிப்பிட்டுள்ளது.
உரிமம் பெற்ற அரச வங்கிகள், பட்டியலிடப்பட்ட தனியார் வங்கிகள் மற்றும் சர்வதேச வங்கிகளின் கிளை அலுவலகங்கள் ஆகியவற்றால் அனைத்து வங்கிகளையும் இலங்கை வங்கிகள் சங்கம் பிரதிநிதித்துவப்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனவே அரசாங்கம் ஒருதலைப்பட்டமாக பரேட் சட்டத்தை இடைநிறுத்தியுள்ளதாகவும் இது தொடர்பாக வங்கிகளுடன் எவ்வித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இலங்கை வங்கிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தினால் அனைத்து வர்த்தகர்களுக்கும் கடன் பெறுவதற்கான செலவு அதிகரிக்கும் என இலங்கை வங்கிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
000
Related posts:
|
|
|


