பருவ மழை ஆரம்பம் – நாட்டில் டெங்கு தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

Monday, October 18th, 2021

நாட்டில் பருவ மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் டெங்கு நுளம்பு பரவக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சுகாதார வைத்தியதிகள் எச்சரித்துள்ளனர்.

இதேநேரம் கொரோனாத் தொற்று காரணமாக பாடசாலைகள் நீண்ட காலமாக மூடப்பட்டுள்ளதால் அப்பிரதேசத்தில் டெங்கு நுளம்பு அதிகமாக பரவக் கூடிய வாய்ப்புகள் காணப்படுவதால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட்டு குறித்த இடங்களை டெங்கு துளம்புகள் அற்ற இடங்களாக உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும், சுகாதார வைத்தியதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்..

இதேவேளை டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் காணப்படுமாயின் குறுகிய காலத்திற்குள் துப்பரவு செய்ய வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள், நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்புரவாக தமது வதிவிடங்களை இடங்களை வைத்து கொள்ளுமாறு சுகாதார வைத்தியதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: