பருத்தித்துறை மருதடிப்பகுதிக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து மோட்டார்க் குண்டு மீட்பு
Tuesday, June 21st, 2016
யாழ். பருத்தித்துறை மருதடிப்பகுதிக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து நேற்று (20) மாலை மோட்டார்க் குண்டொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த மோட்டார்க் குண்டு 1 ½ நீளமுடையது எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீட்டு உரிமையாளர் நேற்று மாலை வீடு துப்பரவு செய்து கொண்டிருந்த வேளையிலேயே இக் குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பருத்தித்துறைப் பொலிஸாருக்கு நேரில் சென்று வீட்டு உரிமையாளரால் தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸாரும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து மோட்டார்க் குண்டை மீட்டெடுத்துச் சென்றனர். குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் புதிய யாப்பு!
பொதுப் பொக்குவரத்து சேவையில் யாசகம் எடுக்க தடை - அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவிப்பு!
விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை - அ...
|
|
|


