பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றது – யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவிப்பு!
Tuesday, October 10th, 2023
பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி தொடர்பிலான விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக யாழ் பிரதி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம் பெற்ற சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தல் தொடர்பிலான கூட்டத்தின் போது,
பருத்தித்துறையில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் வடமராட்சி கிழக்கில் களவாக மணல் ஏற்றுபவர்களுக்கு ஒத்துழைக்காவிட்டால் கஞ்சா வழக்கு போடுவேன் என அச்சுறுத்தல் விடுகின்றார் என தெரிவிக்கப்பட்டமை தொடர்பில் உரிய விசாரணை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் விசாரணைகள் முடிவுற்றதும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் யாழ் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வினாவினை வாசித்து புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரம் - பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித!
யாழ்ப்பாணத்தில் பொலிஸ் ரோந்துகள் அதிகரிக்கப்படும் - சிவில் பாதுகாப்புக் கூட்டத்தில் பொலிஸ் அதிகாரி த...
ஆசிய - பசுபிக் வலய அமைச்சர்கள் மற்றும் சுற்றாடல் அதிகாரிகளின் ஐந்தாவது கலந்துரையாடல் கொழும்பில்!
|
|
|


