பரீட்சையை நடாத்துமாறு கல்வியமைச்சு கோரிக்கை!
Monday, May 27th, 2019
அரச பாடசாலைகளில் எச்சந்தர்ப்பத்திலும் தவணை பரீட்சையை கைவிட வேண்டாம் என அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம்.ரத்நாயக்க பாடசாலை அதிபர்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி கொழும்பிலும் மட்டக்களப்பிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து, பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளில் கற்றல் நடவடிக்கைகள் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி தொடங்கப்படவிருந்த போதும், பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு மே 6 ஆம் திகதியே பாடசாலைகள் தொடங்கப்பட்டன.
இந்த விடயங்களைக் கருத்தில் கொண்டு, பாடசாலைகளில் விடுபட்ட பாடத்திட்டங்களை பூர்த்தி செய்வதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
Related posts:
தேசிய தமிழ் தின விழா யாழ்ப்பாணத்தில் - கல்வி இராஜாங்க அமைச்சர்!
போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை!
33 இலட்சம் குடும்பங்களுக்கு அரசாங்க நிவாரண உதவி - ரூபா 5,000 முதல் 7500 வரை நிதியுதவி வழங்க தீர்மானம...
|
|
|


