பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்கு விசேட பேருந்து சேவை!

Thursday, August 2nd, 2018

க.பொ.த உயர்தரப் பரீட்சை மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக 770 சிசுசெரிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த பேருந்துகள் பரீட்சைகள் முடிவடையும் வரை சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த சேவையில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் 011 ௲ 7 555 555 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைப் பதிவு செய்ய முடியும் எனவும் இலங்கை போக்குவரத்து சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts: